January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் முறைப்பாடு

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

சுகாதார விதிமுறைகளை மீறி நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முறைப்பாட்டைத் தொடர்ந்தே, ஆர்ப்பாட்டத்துக்கு வருவோரைத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பொதுமக்கள் ஒன்றுகூடுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆர்ப்பாட்டத்துக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.