January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற திருவள்ளுவர் விழா!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்ட செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த திருவள்ளுவர் விழா மற்றும் மன்னார் மாவட்ட கீதம் வெளியீட்டு விழாவும் இன்று (16) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் இரத்தினம் நித்தியானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இதன் போது மன்னார் மாவட்ட செயலக நுழைவாயிலில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மண்டபம் வரை திருவள்ளுவர் சிலை பவனியாக கொண்டு வரப்பட்டது.

இதனை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வருகை தந்த விருந்தினர்கள், கலைஞர்கள் இணைந்து மன்னார் மாவட்ட கீதம் வெளியீடு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, திருவள்ளுவர் விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், இளம் கலைஞர்களுக்கும் பரிசில்கள் மற்றும் வெற்றி கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் மதத் தலைவர்கள் உள்ளடங்கலாக பிரதேச செயலாளர்கள், கலைஞர்கள், திணைக்களத் தலைவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.