July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுங்க நடவடிக்கைகளில் நிர்வாக ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு இலங்கை- ரஷ்யா இணக்கம்

சுங்க நடவடிக்கைகளில் நிர்வாக ஒத்துழைப்புகளைக் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கும் ரஷ்யா அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல் தொடரின் பின்னர், வெளிப்படையானதும் முன் கணிப்பிடக் கூடியதுமான சுங்க நடவடிக்கை முறைகள் ஊடாக சட்ட ரீதியான வணிக நடவடிக்கைகளுக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக இருதரப்பு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் செலவுகளைக் குறைத்தல், தேச எல்லைகள் உள்ளிட்ட வரிகளை சரியான வகையில் கணிப்பிடல் மற்றும் சேகரித்தல், மட்டுப்பாடுகளின் கீழ் பண்டங்களை பரிமாற்றிக்கொள்வதை கட்டுப்படுத்தல், தடுத்தல் மற்றும் அதற்குரிய ஒழுங்குவிதிகளை வகுத்தல் போன்றவற்றுக்காக இவ் ஒப்பந்தம் பங்களிப்புச் செய்யும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இருதரப்பினருக்கிடையே கையொப்பமிடுவதற்காக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.