கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் பிணை கோரிக்கை கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ரிஷாட் பதியுதீனை நவம்பர் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்குமாறும் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து சென்ற போது அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக தெரிவித்து, சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய கடந்த 19 ஆம் திகதி ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டார்.
பின்னர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், தன்னை பிணையில் விடுவிக்குமாறு வலியுறுத்தி தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
எவ்வாறாயினும் இன்றைய தினம் குறித்த பிணை கோரிக்கை மனுவை நிராகரித்த நீதிமன்றம் அவரை தொடர்ந்தும் நவம்பர் 10 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.