July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கை – இந்திய நட்புறவில் எந்த விரிசலும் இல்லை”: அமைச்சர் தினேஷ்

இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் பலமான நட்புறவை கொண்டிருக்கவில்லையென எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் கருத்தை தான் முழுமையாக நிராகரிப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் சிறந்த வெளியுறவுக் கொள்கை மற்றும் சர்வதேச நாடுகளுடனான சிறந்த நட்புறவாலேயே நெருக்கடிகால நிலைமையிலும் இலங்கையால் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடனான சிறந்த நட்புறவே பெருந்தொகை தடுப்பூசிகள் மற்றும் உதவிகளையும் பெற்றுக் கொள்ள இலங்கைக்கு உறுதுணையாக அமைந்தது என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்.

அதேபோன்று ஜப்பான், ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்த இக்கட்டான காலங்களில் கொரோனா தடுப்பூசிகளையும் பாரிய ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.