May 29, 2025 22:16:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எரிவாயுவின் விநியோகம் வழமைக்கு திரும்பியது’

நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவின் விநியோகம் செவ்வாய்க்கிழமை முதல் வழமை போன்று இடம்பெறும் என்று லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.

தற்போது மேல் மாகாணத்தில் சமையல் எரிவாயுவின் விநியோகம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் 4 நாட்கள் தடைப்பட்டதன் காரணமாகவே சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.