June 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயங்கரவாத ஒழிப்புச் சட்ட மீளாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது

இலங்கையின் 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் தலைவரும் பாதுகாப்புச் செயலாளருமான கமல் குணரத்ன அறிக்கையின் முதற் பிரதியை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பின் பல்வேறு அம்சங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள உரையாடல்களைக் கவனத்திற்கொண்டு, 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத ஒழிப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீளாய்வு செய்யும் அமைச்சரவை உப குழுவுக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காகவே இந்தக் குழு நியமிக்கப்பட்டது.