சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை 50 நாட்களுக்கு மூடத் தீர்மானித்ததாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
வலுசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பைப் பேணுவதற்காக அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கையிருப்பில் உள்ள வெளிநாட்டு நாணயங்கள் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு கடன் உதவிகள் மூலம் நாணயக் கையிருப்புப் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்ட பின்னர், எரிபொருள் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.