February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடுமையான நிபந்தனைகளுடன் ரியாஜ் பதியுதீனை விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரியாஜ் பதியுதீன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கராவது தடைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவின் கீழ் உள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் அவரை விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரியாஜ் பதியுதீன் கொழும்பில் இருந்து வெளி நகரங்களுக்கு செல்வதற்கும், வெளிநாட்டுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி, கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.