January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கான விமான சேவைகளை இடை நிறுத்தியது துருக்கி!

கொவிட் தொற்று பரவல் காரணமாக துருக்கி ஏர்லைன்ஸ் இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கான விமான சேவைகளை இடை நிறுத்தியுள்ளது.

கொவிட் தொற்று பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரேசில், தென்னாபிரிக்கா, நேபாளம் மற்றும் இலங்கைக்கான விமான சேவைகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி உஸ்துன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

துருக்கிய ஏர்லைன்ஸ் விமானப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதால் மறு அறிவிப்பு வரும் வரை விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக உஸ்துன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கைகளின் படி, பிரேசிலில் 731 இறப்புகள் பதிவானதையடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 611,222 ஆக உயர்வடைந்தது.

அமெரிக்காவிற்கு பிறகு மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் உள்ளது என துருக்கிய ஊடகமான டெய்லி சபா தெரிவித்துள்ளது.

தொற்றுநோயின் மோசமான நிலைமைகள் இருந்தபோதிலும், பெப்ரவரியில் மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவையில் துருக்கி விமான நிறுவனம் முதலிடம் பிடித்தது.