இலங்கைக்கு எதிராக ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பில் முறையிடுவதாக சீன உர நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சேதன உர மாதிரிகள் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே முரண்பாடு வலுத்துள்ளது.
சீனாவின் கிங்டாவோ சீவின் பயோன்டொக் நிறுவனத்தின் சேதன உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இருப்பதாக இலங்கை விவசாய திணைக்களம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பக்டீரியாக்கள் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இலங்கையின் விவசாய திணைக்களத்திடம் சீன நிறுவனம் நஷ்டஈடு கோரியுள்ளது.
சீன நிறுவனத்தின் கோரிக்கை தொடர்பாக இலங்கையின் சட்டமா அதிபருடன் விவசாய திணைக்களம் ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தமது நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்கு எதிராக ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பில் முறையிடுவதாக சீன உர நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.