இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் நடத்தவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளன.
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சி நாளை கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுக்க தயாராகியுள்ளது.
குறித்த பேரணிக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையின் அனுமதியின்றி பேரணியை முன்னெடுப்பதற்கு நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளன.
புதுக்கடை இலக்கம் 5, மஹர இலக்கம் 1, 2, கடுவலை மற்றும் ஹோமாகம நீதிமன்றங்கள் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பித்துள்ளன.
மாலிகாகந்த, கங்கொடவில மற்றும் கொழும்பு பிரதான நீதவான் ஆகியோர் பொலிஸாரின் தடை உத்தரவு கோரளை நிராகரித்துள்ளனர்.
அனுமதி மறுக்கப்பட்டாலும் தாம் பேரணியைத் தொடர்வதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.