January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீதி விபத்தில் மாணவி மரணம்: கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் முன்னால் இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அந்தப் பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதுடன், அதன்போது பாதசாரி கடவை ஊடாக வீதியை கடக்க முயன்ற மாணவி ஒருவர் அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சிவில் சமூக அமைப்புக்களை சேர்ந்தோர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீதி ஒழுங்குகளை கடைபிடிக்க வேண்டிய பொலிஸார் உரிய காலத்தில் கடமையில் இருக்க வேண்டும் என்றும், அந்தப் பகுதியில் வேகக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

This slideshow requires JavaScript.