
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரான ரோஜர் செனவிரத்ன ஆகிய மூவரையும் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இவ்வாறு இவர்களைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது.
இவர்கள் வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராகத் தவறிய காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.