சீன உர இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை இராஜதந்திர முரண்பாடாக மாற்றத் தேவையில்லை என்று இலங்கைக்கான சீன தூதுவர் வி. ஷென்க்ஹோன்க் தெரிவித்துள்ளார்.
கண்டி அஸ்கிரிய மகாநாயக்க தேரரைச் சந்தித்ததைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனத்துடனான உரப் பிரச்சினையை வர்த்தக ரீதியில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த பிரச்சினை அரசியல் ரீதியாக திசை திருப்பப்படுவதையிட்டு தான் கவலைப்படுவதாகவும் சீன தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் ஒரு பரிசோதனைக்கு இரு தரப்பும் இணங்கியுள்ளதை அறியக் கிடைப்பதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.