இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தற்போது குறைவடைந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் சுகாதார விதிமுறைகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அவர் மேலும் அறிவுறுத்தினார்.
கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு அவதானிக்க முடிவதோடு எதிர்வரும் வாரங்களில் நாம் கவனமாக செயற்படாவிட்டால் நாடு மீண்டும் சிக்கலை சந்திக்க நேரிடும்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நாடு மீண்டும் முடக்கப்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிப்படையும் எனவும் சன்ன ஜயசுமண கூறினார்.
அத்தோடு நாட்டில் எதிர்வரும் 5 க்கும் அதிகமான காலப்பகுதியில் மழை மற்றும் குளிருடனான காலநிலை தொடர்வதால் இந்த காலப்பகுதி நோய் பரவலுக்கு சாதகமான நிலைமையை தோற்றுவிக்கும்.எனவே கொவிட் தொற்று பரவல் அடையாது இருக்க ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.