”மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் முயற்சிகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி இந்த போராட்டத்தை நடத்த முயல்வது நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்ல மாறாக கொவிட் பரவலை அதிகரித்து நாட்டை மீண்டும் முடக்கத்துக்கு இட்டுச்செல்வதற்காகும் என அவர் கூறினார்.
எந்த பதவியில் இருந்தாலும் சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.
தம்முடன் ஒன்றிணைந்து செயற்படுவதே எதிர்க்கட்சிகளின் பணியாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நான் அனுமதிக்க மாட்டேன்.
நீதிமன்ற உத்தரவு வந்தால், கண்டிப்பாக சட்டவிரோத பேரணிகள் மற்றும் போராட்டங்களையும் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.