January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேடப்பட்டு வந்த அங்கொட லொக்காவின் சகா இந்தியாவில் கைது!

இலங்கை பொலிஸாரால் தேடப்படும் குற்றவாளியான “அதுருகிரிய லடியா” இந்தியாவின் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதாள உலகக்குழு உறுப்பினர் அங்கொட லொக்காவின் உதவியாளர்களில் ஒருவரான லதியா (38) என்ற சானுக தனநாயக்க  சனிக்கிழமை கோயம்புத்தூர் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த சானுக தனநாயக்கவுக்கு பெங்களூரில் தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டில் டி. கோபாலகிருஷ்ணன் என்கிற ஜெயபால் (46) என்ற மற்றொரு நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இருவரும் சனிக்கிழமை இரவு தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஒஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ஜூலை 3, 2020 அன்று கோயம்புத்தூரில் மறைந்திருந்தபோது மாரடைப்பு காரணமாக அங்கொட லொக்கா உயிரிழந்திருந்தார். இவரின் கைத்துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் லடியா குற்றப்புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்தார்.

மேலதிக விசாரணைக்காக இருவரையும் 7 நாட்கள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் திங்கட்கிழமை மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.