2022 ஜனவரியில் இருந்து நடத்துனர்கள் இன்றி பஸ் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆராய்ந்து வருகிறது.
எரிபொருள், டயர் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினாலும் மற்றும் பஸ் உரிமையாளர்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினாலும், நடத்துனர்கள் இன்றி பஸ்களை செலுத்துவதற்கு ஆராய்ந்து வருகின்றோம் என்று அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி பஸ்களில் பயணிகளுக்கு கட்டணங்களை செலுத்தக் கூடியவகையில் முற்கொடுப்பனவு இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.