May 28, 2025 14:23:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது!

மன்னார், கோந்தைபிட்டி கடற்கரை பகுதியில் சனிக்கிழமை காலை மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 வயதுடைய கீர்த்தனா என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் இந்த யுவதி பணியாற்றி வந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி கடந்த வியாழக்கிழமை பணி முடிவடைந்த பின்னர் மன்னார் பஸ் தரிப்பிடத்திற்கு சென்றுள்ளதுடன், அதன்போது அவர், ஆண் நண்பர் ஒருவருடன் நடந்து செல்லும் சீசீரிவி காணொளி வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து மன்னார் பிரதான பாலத்திற்கு கீழிருந்து சனிக்கிழமை காலை, யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை வரையில் அந்த சடலம் அடையாளம் காணப்படாதிருந்த நிலையில், அந்த சடலம் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

தாய் மற்றும் சகோதரர் ஒருவர் இன்றைய தினம் காலை வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். .