இலங்கையில் போதைப் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
பொதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் போதைப் பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளமை ஆகிய காரணங்களினால் அதற்கு தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் வியாபாரிகளுக்கு தொலைபேசிகளை பயன்படுத்த முடியாதவாறு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இடையிலான தொடர்புகள் இல்லாத காரணத்தினால் போதைப் பொருள் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் புலனாய்வாளர்களின் தகவல்களின்படி போதைப் பொதைப் பொருள் பற்றாக்குறையால் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் அதிகளவான விலைக்கு போதைப் பொருட்கள் விற்பனையாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் முழுமையாக போதைப் பொருள் கட்டமைப்பை செயலிழக்கச் செய்ய தேவையான நடவடிக்கைகளில் பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.