
கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ அனல் மின்நிலையம் தொடர்பான ஒப்பந்தம் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதனால் இந்த ஒப்பந்தம் சட்டவிராதமானது என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை உரையாற்றும் போது ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.
”பாராளுமன்றம் எம்மை ஏமாற்றி இருக்கின்றது. எரிவாயு விநியோகிக்க யாருக்கும் ஏகபோக உரிமை இல்லை என தெரிவித்திருக்கின்றது. ஆனால் ஒப்பந்த்தில் கெரவலப்பிடிட்டியவுக்கு எரிவாயு விநியோகிக்கும் ஏகபோக உரிமை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்றது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சி பிரதமகொரடா லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்கும் தகவல்களை சமர்ப்பிப்பது அரசாங்கத்தின் கடமை என்று கூறியுள்ளார்.
ஆனால் யுகதனவி ஒப்பந்தத்தில் சரத்தொன்றில், இந்த ஒப்பந்தத்தை யார் கேட்டாலும் வழங்குவதில்லை என குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள கிரியெல்ல, அரசாங்கம் சர்வதேச ஒப்பந்தங்களை செய்யும்போது அந்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கவேண்டும். அதனை வழங்க முடியாது என தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.