File Photo
கொவிட் தடுப்புச் சட்டத்தை தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தாது ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தவென பயன்படுத்தினால், ஆர்ப்பாட்டங்களுக்குப் பதிலாக வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்போம் என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரச சேவையின் செயல்திறனை அதிகரிக்க வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில முன்மொழிவுகள் தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்திற்கமை அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவது, ஊழியர் ஒருவர் 10 வருட ஓய்வூதியத்தை இழக்கச் செய்யும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடு மற்றும் சுகாதார நிபுணர்களின் முரண்பாடுகள் தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காணப்படவில்லை எனவும் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.