அடுத்த ஒரு வருடத்துக்கு பொதுச் சேவைக்காக, பொது மக்கள் நிதியை பயன்படுத்துவதற்கான இயலுமை இல்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மக்களிடம் இருந்து பணத்தைப் பெறுவதுதான் அரசாங்கத்திற்கு ஒரே வழி. இன்னும் ஒரு வருடத்திற்கு பொதுச் சேவைக்காக பொதுப் பணத்தைச் செலவிட முடியாது” என குறிப்பிட்டார்.
“நாம் மேலும் மறைக்க தேவையில்லை, பொதுச் சேவை என்பது நாட்டுக்கு பாரிய சுமை என்பதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்” எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது வலியுறுத்தினார்.