மோட்டார் போக்குவரத்து அபராதம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஆவணம் முற்றிலும் பொய்யானது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
“திருத்தப்பட்ட மோட்டார் போக்குவரத்துச் சட்டம்” எனக் குறிப்பிடப்பட்ட குறித்த போலி ஆவணம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அபராதங்கள் தற்போதுள்ள சட்டங்களின்படி தவறானவை என்றும் பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
இதுபோன்ற பொய்யான செய்திகளைப் பகிர வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, மோட்டார் வாகன விபத்துகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடுவது தொடர்பில் முன்மொழிந்துள்ள போதிலும் அது தொடர்பில் சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.