January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். இந்துக் கல்லூரிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ பாராட்டு

யாழ். இந்துக் கல்லூரியின் புதிய விளையாட்டுத் திடல் திறந்து வைக்கப்பட்டதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட விளையாட்டுத் திடல் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

நேற்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதால், திறப்பு விழாவில் பங்கேற்க முடியாமல் போனதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தான் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து, விளையாட்டுத் திடலைப் பார்வையிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்துக் கல்லூரி பழைய மாணவர் பிரிட்டன் கிளையின் நிதிப் பங்களிப்பில் விளையாட்டுத் திடல் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டுத் திடலில் இலத்திரனியல் ஸ்கோர் போட், கழக மனை, பயிற்சிகளுக்கான இடங்கள் அமைக்கப்பட்டிருப்பது விசேட அம்சமாகும்.

This slideshow requires JavaScript.