ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை இந்திய நட்புறவு சங்கத்தின் தலைவராக நீர்ப்பாசன அமைச்சரும், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே விசேட விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடங்கலான 100 கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.ஏ. சுமந்திரன் மற்றும் வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் இலங்கை- இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் பிரதித் தலைவர்காளகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா செயலாளராகவும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உதவிச் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.