இலங்கையின் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் சுற்றிவளைப்பில் 628 கைது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள், மதுபானம் மற்றும் சட்ட விரோத மதுபான உற்பத்தி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த 91 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இதேநேரம், ஹொரோயினுடன் 82 பேரும் கஞ்சாவுடன் 114 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட விரோத மதுபான பாவனையில் ஈடுபட்ட 192 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1000 க்கும் அதிகமான சட்ட விரோத மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.