February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர்கள் குழு அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சட்ட நிபுணர்கள் குழு இன்று அதிகாலை அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும் கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர்கள் குழுவே அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர்.

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பொன்றின் பெயரில் இவர்கள் பயணமாகியுள்ளனர்.

இலங்கையின் அரசியல் தீர்வு, சட்ட நியாயாதிக்கம் மற்றும் ஏனைய சட்ட பிரச்சினைகள் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துடன் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.