
உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்களின் புதிய விலைகளை மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் வரி அதிகரிக்கப்பட்ட பின்னர் மதுபான விலைகளை மதுவரித் திணைக்களம் திருத்தியுள்ளது.
அதன்படி, 750 மில்லி லீட்டர் உள்நாட்டு அதி விசேஷம் சாராயத்தின் விலை 96.14 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஏனைய உள்நாட்டு சாராய போத்தல் ஒன்றின் விலை 103.73 ரூபாயாலும், வெளிநாட்டு மதுபான போத்தல் ஒன்றின் விலை 127 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 வீதத்தை விட குறைவான மதுபான செறிவை கொண்ட பியர் வகைகள் 3.10 ரூபாயாலும் 5 வீதத்தை விட அதிகமான மதுபான செறிவைக் கொண்ட பியர் வகைகள் 14 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.