January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீன உர நிறுவனத்தின் நஷ்டஈடு கோரல் தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை

சீன உர நிறுவனம் இலங்கையிடம் நஷ்டஈடு கோரியுள்ள நிலையில், அது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீன உர நிறுவனம் விவசாய திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரியுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தில் பக்டீரியாக்கள் இருப்பதாக தெரிவித்ததால், தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தில் பக்டீரியாக்கள் இல்லை என்று மூன்றாம் தரப்பு ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

பக்டீரியாக்கள் இருப்பது முதல் இரண்டு பரிசோதனைகளில் கண்டறியப்பட்டதால், இலங்கை உர இறக்குமதியை இரத்து செய்தது.

சீன நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ள நிலையில், இலங்கை சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரவுள்ளது.