
இலங்கையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் மீதான கலால் வரியை அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது அவர் இதனை தெரிவித்தார்.
இதற்கமைய சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு 8 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என நிதி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
3 வருடங்களுக்கு பின்னர் சிகரட் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை மோட்டார் வாகன விபத்துக்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடவும், காப்பீடு மூலம் அந்தக் தண்டப்பணம் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்கவும் நிதி அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.