January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நவீன வசதிகளுடன் யாழ். இந்துக் கல்லூரியின் விளையாட்டுத் திடல் திறந்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில்  நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடல் இன்று திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் 55 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இந்த விளையாட்டுத் திடல் கல்லூரி நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில் மாறன், கல்லூரியின் பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ், யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன், பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்கள் நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த விளையாட்டுத் திடலில் இலத்திரனியல் ஸ்கோர்போட், கழக மனை, பயிற்சிகளுக்கான இடங்கள்  உள்ளமை விசேட அம்சமாகும்.

வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே மிகவும் நவீனகரமான ஒரு திடலாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விளையாட்டுத் திடலில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி பங்கேற்கவிருக்கும் 19 வயதிற்குட்பட்டோருக்கான 30 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.