January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொதுமக்கள் ஒன்றுகூடல்கள் தொடர்பான தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதியில் திருத்தம்

கொரோனா காலத்தில் பொதுமக்கள் ஒன்றுகூடும் போது கடைபிடிக்க வேண்டிய தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தின் 2 மற்றும் 3 ஆம் பிரிவுகளின் கீழ் சுகாதார அமைச்சர் இந்த திருத்தங்களை மேற்கொண்டுள்ளார்.

இதனடிப்படையில், பொதுமக்கள் ஒன்றுகூடல்கள் முறையான அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றே நடைபெற வேண்டும் என்று சுகாதார அமைச்சர் வெளியிட்ட ஒழுங்குவிதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றுகூடல்களுக்கு அனுமதி வழங்குதல், ஒன்றுகூட முடியுமானவர்களின் எண்ணிக்கை போன்றவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரமும் பொறுப்பான அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ஒழுங்குவிதிகளை மீறுவது சட்டப்படி குற்றமாகும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.