பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கும் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யக் கோரியே, ரதன தேரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அபே ஜனபல கட்சியின் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் நுழைந்த ரதன தேரர், இப்போது அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, தேரரின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கும்படி அபே ஜனபல கட்சி தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
அபே ஜனபல கட்சி, தேர்தல் ஆணைக்குழு, பாராளுமன்ற செயலாளர் உட்பட 11 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.