July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 55 இல் இருந்து 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்ததுடன், அது தொடர்பான விவாதம் இன்று காலை முதல் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து, வாக்கெடுப்பு இன்றி சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தனியார்துறை வேலையாட்களின் ஓய்வுபெறும் வயதெல்லை சட்டத்தில் வரையறுக்கப்படாது, சம்பிரதாயபூர்வமாகவே 55 வயது என கூறப்படுகின்றது எனவும், ஆனால் இதனை சட்டப்படி 60 ஆக குறிப்பிட நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

எமது ஆயுட்காலம் குறைவாக இருந்த காலத்திலேயே ஓய்வுப் பெறும் வயதை 55 ஆக குறிப்பிட்டிருந்தனர் எனவும், ஆனால் சுகாதார முன்னேற்றத்தினால் ஆயுட்காலம் அதிகரித்துள்ளமையினால் ஓய்வு பெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.