இலங்கையில் 433 பொருட்கள் மீது இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காய்கறி மற்றும் பழவகைகளுக்கும் இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தரை ஓடுகள், கருங்கற்கள், பலகை வகைகள், பிளாஸ்டிக் பொருட்கள், முகக் கவசங்கள், மிதி வண்டிகள், சவர்க்காரங்கள் போன்றவற்றுக்கும் இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடுகளால் அரசாங்கத்துக்கு 1.6 பில்லியன் டொலரைச் சேமிக்கலாம் என்று ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.