
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன உர மாதிரிகளில் நச்சு பக்டீரியாக்கள் இல்லை என்று மூன்றாம் தரப்பு பரிசோதனையில் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட இரண்டு பரிசோதனைகளிலும் நச்சுத் தன்மை கொண்ட பக்டீரியாக்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மூன்றாம் தரப்பு ஆய்வு நிறுவனம் ஒன்றில் மாதிரிகள் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஸ்கட்டர் க்ளோபல் இன்ஸ்பென்ஷன் மற்றும் சேர்வே கம்பனி எனும் மூன்றாம் தரப்பு ஆய்வு நிறுவனத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள இரண்டு தரப்பும் உடன்பட்டன.
சீன நிறுவனம் வழங்கிய உர மாதிரிகளில் கோலிபோர்ம் பக்டீரியா, சல்மோனெல்லா மற்றும் அஸ்கார்ட் முட்டைகள் போன்ற தீங்கை உண்டுபண்ணும் அம்சங்கள் கண்டறியப்படவில்லை என்று ஸ்கட்டர் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
தமது நற்பெயரைப் பாதிக்கும் விதமாக செயற்பட்டமைக்கு சீன நிறுவனம் இலங்கையிடம் 8 மில்லியன் டொலர் நஷ்டஈடு கோரியுள்ளது.