May 25, 2025 18:01:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமல்போன உறவுகளை கண்டுபிடிக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு மட்டுமே உள்ளது; உறவுகள் வேண்டுகோள்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு மட்டுமே உள்ளது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்க வெளிவிவகார செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

“வன்னியில் நடந்த இனப் போரின்போது, 25,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். நாங்கள் 1347 வது நாளாக ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு என உண்ணாவிரதம் இருக்கிறோம். எங்கள் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் வரை எங்கள் உண்ணாவிரதம் தொடரும்.

எங்கள் குழந்தைகளை தடுப்புக்காவல் மற்றும் பிற மறைவிடங்களிலிருந்து அழைத்து வர வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்க இலங்கை தவறிவிட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்க அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. துன்பப்படும் இந்த தமிழ் தாய்மார்களுக்கு உதவ உங்கள் அலுவலகத்தைப் பயன்படுத்துமாறு செயலாளரை நாங்கள் தயவாக கேட்கிறோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.