February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொள்ள சென்ற போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதோடு, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்துகொண்டிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவுப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.