January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

(File Photo)

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 17 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த அனர்த்தங்களில் சிக்கி ஏழு பேர் காயமடைந்துள்ளதோடு, ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இதற்கிடையில், 60,264 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 212,030 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் நிர்வகிக்கப்படும் 76 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு இந்த அனர்த்தங்களில் 23 வீடுகள் முழுமையாகவும், 1,229 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.