January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துமிந்த நாகமுவ உள்ளிட்ட ஐவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிப்பு!

நீதிவான் நீதிமன்றுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முறை தவறி செயற்பட்டமைக்காக முன்னிலை சோஷலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட ஐவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடுவலை நீதிவான் நீதிமன்றுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடுவலை நீதிவான் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் போது முறை தவறி செயற்பட்டமை, நீதிமன்றை அவமதித்தமை மற்றும் அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக கொழும்பு 2 இல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், துமிந்த நாகமுவ உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.