November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்தின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் சீன தடுப்பூசிகள்!

இங்கிலாந்தின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் சீனா மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் சில தடுப்பூசிகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இதன்படி, சீனாவின் தயாரிப்புகளான சினோவாக், சினோபார்ம் தடுப்பூசிகளும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளே இவ்வாறு இங்கிலாந்தின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளன.

ஐக்கிய இராச்சியத்திற்குள் வரும் பயணிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் நவம்பர் 22 முதல் இவை சேர்க்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசரகால பயன்பாட்டுப் பட்டியலில் தடுப்பூசிகளை பிரிட்டன் அங்கீகரிக்க உள்ளது.

இந்தியாவின், கோவாக்சின் தடுப்பூசிக்கு சுவிட்சர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகள்  ஏற்கனவே அங்கீகாரம் அளித்துள்ளன.