January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள வெளிநாட்டவர்களுக்கு அழைப்பு

இலங்கையின் வட மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வெளிநாட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

வட மாகாணத்தில் புதிய வர்த்தக முதலீடுகளை மேற்கொள்வதற்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்காக அனைத்து வகையான நிவாரணங்களையும் அரசாங்கம் வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாண மக்களுக்கு தான் இரவு- பகல் பாராமல் சேவைகளை முன்னெடுப்பதாகவும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறிப்பிட்டுள்ளார்.