May 25, 2025 22:47:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழர்கள் நியமனம்

“ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்த ராஜா ஆகியோருக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

11 உறுப்பினர்களைக் கொண்ட “ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் எவரும் உள்ளடக்கப்படாமை தொடர்பில் கடந்த சில நாட்களாக பல தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருந்த நிலையிலேயே குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.