February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். காரைநகர் பிரதேச சபை சுயேட்சை குழு வசமானது

யாழ். காரைநகர் பிரதேச சபையை சுயேட்சை குழு கைப்பற்றியுள்ளது.

யாழ். காரைநகர்  பிரதேச சபை தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு, உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில,  இன்றைய தினம் நடைபெற்றது.

குறித்து அமர்வின்போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் போட்டியிட இருந்த போதிலும், அவருக்கு ஏனைய கட்சிகள் ஆதரவு அளிக்காத நிலையில், சுயேட்சை குழு உறுப்பினர் அப்புத்துரை என்பவர், தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டு, ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவுடன்  வெற்றியீட்டியுள்ளார்.

இந்த தவிசாளர் தெரிவு விசேட அமர்வில், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

காரைநகர்  பிரதேச சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மூன்று உறுப்பினர்களும் சுயேட்சை குழுவில் மூன்று உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியில் இரண்டு உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஒருவருமாக உள்ள நிலையில், ஈ.பி.டி.பி.யின் ஆதரவுடன் சுயேட்சை குழுவானது தவிசாளர் பதவியை கைப்பற்றியுள்ளது.

காரைநகர் பிரதேச சபையின் முன்னாள்  தவிசாளர் இதயநோய் தாக்கத்தால் உயிரிழந்த நிலையில், பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.