இலங்கையின் கனடாவுக்கான புதிய தூதுவராக, விரைவில் ஓய்வுபெறவுள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்படவுள்ளார்.
கனடா, சுவீடன், நைஜீரியா, சவுதி அரேபியா, நெதர்லாந்து, எகிப்து, போலந்து, தாய்லாந்து மற்றும் கட்டார் ஆகிய 9 நாடுகளுக்கான இலங்கையின் புதிய தூதுவர்களாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் உயர்-பதவிகளுக்கான பாராளுமன்றக் குழுவுக்கு உறுதிப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
பரிந்துரை செய்யப்பட்டவர்களின் தகைமைகள் குறித்து பாராளுமன்றக்குழு ஆராயவுள்ளது.
புதிய தூதுவர்களின் விபரம்:
- எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் – கனடாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர்
- தர்ஷன பெரேரா – சுவீடனுக்கான இலங்கைத் தூதுவர்
- ஏ.எம்.ஜே. சாதீக் – நைஜீரியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர்
- அஹமட் ஏ. ஜவாத் – சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர்
- அருணி ரணராஜா – நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர்
- எம்.கே. பத்மநாதன் – எகிப்துக்கான இலங்கைத் தூதுவர்
- எல்.ஏ.கே. சேமசிங்க – போலாந்துக்கான இலங்கைத் தூதுவர்
- சமிந்தா ஏ. கேலன்னே – தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர்
- எம். மபாஸ் மொஹீதின் – கட்டாருக்கான இலங்கைத் தூதுவர்
இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக எவரேனும் அல்லது எந்தவொரு அமைப்பும் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினால், 2020 நவம்பர் மாதம் 7-ஆம் திகதிக்கு முன்னர் முறையாகக் கையொப்பமிட்டு, “செயலாளர், உயர்-பதவிகள் பற்றிய குழு, குழுப் பணியகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, என்ற முகவரிக்கு அல்லது 011-2777300 தொலைபேசியின் ஊடாக அல்லது highposts_e@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் உயர்-பதவிகளுக்கான பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.