December 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு பங்குச் சந்தை பரிவர்த்தனையில் சரிவு!

கொழும்பு பங்குச் சந்தையின் பங்குப் பரிவர்த்தனை விலைச் சுட்டி, இன்றைய தினத்தில் குறிப்பிடத்தக்க வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, அனைத்துப் பங்குகளின் (ASPI) விலைச் சுட்டி முந்தைய தினத்தை விடவும் இன்று 259.60 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்றைய பரிவர்த்தனை முடிவில் 10,621.40 புள்ளிகளாக காணப்பட்ட அனைத்து பங்குகளின் விலைக் சுட்டி, இன்றை தினம் பரிவர்த்தனை முடிவில் 10,361.80 புள்ளிகளாக காணப்பட்டது.

இது 2.43 வீத வீழ்ச்சியாகும் என்று கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

இதேவேளை, S&P SL20 விலைச் சுட்டியிலும் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.