சஹரானின் மனைவியின் வாக்குமூலத்தை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, ஹரின் பெர்ணான்டோ இதனைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
புலனாய்வு அதிகாரி ஒருவர் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் சஹரானை அவரது வீட்டில் சந்தித்துள்ளதாக சஹரானின் மனைவியின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாக ஹரின் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த அறிக்கையில் வெளிவராத தகவல்களை தாம் வெளியிட்டதாகவும், அதுதொடர்பில் விவாதத்துக்கு வருமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை அழைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2019 ஏப்ரல் 4 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட லொறிகள் மற்றும் அவற்றை விடுவித்த உயர் பொலிஸ் அதிகாரி தொடர்பான தகவல்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று ஹரின் பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
“சஹரானின் மனைவி உயிருடன் இருக்கின்றரா? என்று தெரியவில்லை. சஹரானின் மனைவி வெளியிட்ட வாக்குமூலத்தை பாராளுமன்றத்தில் வெளியிடுங்கள்.
புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் சஹரானை சந்தித்ததாக அவரது மனைவி வாக்குமூலமளித்துள்ளார்.
இது பொய் என்றால் சிஐடியை அழைத்து, ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்வாறு கூறவில்லை என்று கூறுமாறு அமைச்சர் சரத் வீரசேகரவை கேட்கின்றேன்”
என்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் தெரிவித்துள்ளார்.