January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ- மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சாலிஹ் சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சாலிஹ் ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் இருவரும் சந்தித்து, கலந்துரையாடியுள்ளனர்.

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலிஹ் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, இலங்கைக்கு வந்துள்ளார்.

மாலைதீவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அஹமட் கலீல், மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தின் வெளிவிவகார செயலாளர் இப்ராஹிம் ஹ_ட், இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் உமர் அப்துல் ரசாக் மற்றும் இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.